இந்தியாவில் 9 மாநிலங்களில் மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் தொடக்கம்! வெளியான முக்கிய தகவல்!

இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுவதில் பல மாநிலங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மே 1-ஆம் திகதி முதல் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், குறிப்பிட்ட திகதியைக் கடந்து இன்று 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் பல மாநிலங்களில் அதற்கான மருந்துகள் கிடைக்கவில்லை என்பதால் அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இதுவரை டெல்லி, மகாராஷ்ட்ரா, சத்தீஸ்கர், குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் மட்டுமே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 21 மாநிலங்களில் தேவையான மருந்துகள் கிடைக்கவில்லை.
இந்த 9 மாநிலங்களுக்கும் மே மாதத்திற்கு தேவியான தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு தலா 3 லட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன.

டெல்லிக்கு 4.5 லட்சம் டோஸ் கிடைத்துள்ளது, ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் உத்தரபிரதேசம் தலா 1.5 லட்சம் டோஸ் பெற்றுள்ளன.

இந்த ஒன்பது மாநிலங்களுக்கு இதுவரை மொத்தம் 22,50,000 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.